உள்நாட்டு செய்திகள்

முடிவுகளுக்காய் ஐ.தே.செயற்குழு நாளை சிறிகொத்தவில் கூடுகின்றது



ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை வெள்ளி (19) சிறிகொத்தவில் இடம்பெறவுள்ளது.

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் காலை 9.30 மணி தொடக்கம் இக்கூட்டம் இடம்பெறவுள்ளது.

அரசியல் ரீதியாக முக்கியமான முடிவுகளை எடுக்கும் நோக்கில் கூடவுள்ள இக்கூட்டத்தில் அனைத்து மத்திய செயற் குழு உறுப்பினர்களும் பங்கேற்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

20ம் திருத்தம் தொடர்பான ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடும் எதிர்கால நடவடிக்கை குறித்தும் இதன் போது கூடிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

மேலும் அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலும் செயற்குழு கூட்டத்தில் விசேடமாக ஆராயப்படவுள்ளது.

Related posts

10 ஆண்டுகள் சேவை பூர்த்தியானோருக்கு இடமாற்றம்…

wpengine

நியூசிலாந்து அணி 223 ஓட்டங்களுடன் சுருண்டது…

wpengine

ஆதரவளியுங்கள் – பிரதமர் உதயகம்மன்பிலவிற்கு கடிதம்!

wpengine