உள்நாட்டு செய்திகள்

முச்சக்கரவண்டிகளின் பயணக் கட்டணம் இன்று(26) முதல் அதிகரிப்பு..



இன்று(26) முதல் முச்சக்கரவண்டிகளில் இரண்டாவது கிலோ மீற்றர் இலிருந்து அறவிடப்படும் கட்டணம் 10 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக முச்சக்கரவண்டிகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு, வாகன உதிரி பாகங்களின் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் குறித்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதாக குறித்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், வாகன உதிரி பாகங்களின் விலையினை குறைத்து முச்சக்கர வண்டிகளின் சேவைக்கான தேசிய கொள்கையை உருவாக்குமாறு கோரி இன்று(26) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குறிப்பொன்றினை முன்வைக்க உள்ளதாகவும் குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

முன்னர் முதலாவது கிலோ மீட்டருக்கு 50 ரூபாவும், இரண்டாவது கிலோ மீட்டருக்கு 40 ரூபாவும் அறவிடப்பட்டு வந்த நிலையில், இன்று(26) முதல் முதலாம் கிலோ மீட்டர் இலிருந்து இறுதிக் கிலோ மீட்டர் வரையில் தலா 50 ரூபா வீதம் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

-Rishma

Related posts

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இஸ்ரேல் அரசும் உதவி..

wpengine

சேவைப் புறக்கணிப்பினால் 15 லட்சம் கடிதங்கள் முடங்கின..

wpengine

பொதுசன பெரமுனவின் பொதுச்சபை கூடியது சட்டபூர்வமானதல்ல- ஜீ. எல்

News Editor