உலக செய்திகள்

முக கவசம் அணியாததால் சிலி ஜனாதிபதிக்கு அபராதம்



(ஃபாஸ்ட் நியூஸ் | சிலி ) – சிலி நாட்டில் முகக்கவசம் அணியாமல் செல்பி எடுத்த அந்நாட்டு ஜனாதிபதிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சிலியில் முக கவசம் அணிவது கட்டாயமாக உள்ளதுடன், பொதுவெளியில் முக கவசம் அணியாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். அதாவது முககவசம் தொடர்பான விதிமுறையை மீறிய நபர்களுக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கும் சட்டம் அமலில் உள்ளது.

கடந்த மாத இறுதியில் ஜனாதிபதிசெபாஸ்டியன் பெனெரா தனது சொந்த ஊரான கச்சாகுவா நகரில் உள்ள கடற்கரைக்கு சென்றபோது, அங்கிருந்த ஒரு பெண்ணின் விருப்பத்துக்காக அவருடன் செல்பி படம் எடுத்துக்கொண்டார்.

அப்போது ஜனாதிபதி செபாஸ்டியன் பெனெரா முக கவசம் அணிந்திருக்கவில்லை. எனவே இந்த செல்பி படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சைக்குள்ளானது.

இந்த நிலையில் அந்த நாட்டின் ஜனாதிபதி முக கவசம் தொடர்பான விதிமுறையை மீறியதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா மரணம்…

wpengine

உலகின் முதல் ஸ்மார்ட் புகையிரதம் சீனாவில் அறிமுகம்…

wpengine

அமெரிக்க CIA இனது இரகசிய தொழில்நுட்பத்தை அம்பலப்படுத்தியது விக்கிலீக்ஸ்…

wpengine