விளையாட்டு

முக்கோண சுதந்திர கிண்ண தொடரின் நேர அட்டவணையில் திருத்தம்…



இலங்கை இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் பங்கேற்கும் முக்கோண சுதந்திர கிண்ண தொடரின் நேர அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதன்படி மார்ச் மாதம் 08 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமாகவிருந்த போட்டியை 06 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு இலங்கை கிரிக்கட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதனுடன் தொடரின் இறுதிப் போட்டி செவ்வாய்கிழமை நடாத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதனை அதற்கு முன்னரான ஞாயிற்றுக்கிழமை நடாத்துவதற்கு எடுத்த தீர்மானம் இந்த திருத்தத்திற்கு காரணம்.

ஞாயிற்றுக்கிழமை அதிகளவான ரசிகர்கள் மைதானத்திற்கு வரக்கூடும் என்பதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிரிக்கட் நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

போட்டி அட்டவணை…

Media preview

 

#rishma

Related posts

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் போட்டிக்கான அணியினர் விவரம் வெளியீடு… [பட்டியல்]

wpengine

இலங்கையுடன் டெஸ்ட்டில் மோதும் பங்களாதேஷ் அணியினர் விபரம்..

wpengine

லசித் மாலிங்க ஊடகங்களுக்கு விசேட அறிவிப்பு…

wpengine