உள்நாட்டு செய்திகள்

முகாம்களுக்குள் நுழைய அனுமதிப்பதில்லை என இராணுவம் தீர்மானம்…



நல்லிணக்கச் செயற்பாடுகளைப் பாதிக்கும் வகையில் செயற்படுவோரை, தமது முகாம்களுக்குள் நுழைய அனுமதிப்பதில்லை என்று இராணுவம் முடிவு செய்துள்ளது.

அத்தகையவர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டாம், அல்லது அத்தகைய நிகழ்வுகளுக்கு உதவ வேண்டாம், அல்லது அனுசரணை வழங்க வேண்டாம் என்று இராணுவம் முடிவு செய்துள்ளது.

சில அரசியல்வாதிகள், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள், மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களும் கூட, அரசாங்கத்தின் நல்லிணக்க செயல்முறைகளை விமர்சித்து வருகின்றனர்.

இதன் காரணமாகவே இராணுவம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தீவிரவாதிகளை செயல்களை பாராட்டி சிலர் உரையாற்றுவது, வடக்கு- கிழக்கில் அமைதியை விரும்பும் மக்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக இருக்கிறது என்றும், அவர்களின் செயற்பாடுகள், மக்களை மீண்டும் போருக்குள் தள்ளுவதாக இருப்பதாகவும் இராணுவம் மேலும் சுட்டிக்காட்டிள்ளது.

Related posts

சாலாவ ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்பு தொடர்பில் இராணுவ அதிகாரிகள் 14 பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை…

wpengine

ஜப்பான் உதவியுடன் யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தை மேம்படுத்த நடவடிக்கை

wpengine

சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு தான் ஜனாதிபதி நிதியில் இருந்து பணம் பெற்றேன்

Azeem Kilabdeen