உள்நாட்டு செய்திகள்

முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடை தொடர்பிலான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு..



(FASTNEWS | COLOMBO) – முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடை அல்லது வேறு பொருட்களைப் பயன்படுத்தல் மற்றும் அணிதல் என்பனவற்றைத் தடை செய்வதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

எந்தவொரு நபரும், பொது இடத்தில் வைத்து, தமது அடையாளம் வெளிப்படுவதைத் தவிர்க்கும் வகையில், முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகள் உள்ளிட்ட வேறு பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழுமையான முகம் என்பது, நெற்றி முதல் தாடை வரையும் மற்றும் இரண்டு காதுகளுக்கும் இடையிலான பகுதி என்பன வெளியில் தெரியும் வகையில் இருக்க வேண்டும் என்றும் வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாடசாலை மாணவர்களுக்கான சீருடையின் வவுச்சர் முறையில் மாற்றமில்லை…

wpengine

ஜனாதிபதியின் தொழிலாளர் தின வாழ்த்து செய்தி

wpengine

“நான் நிரபராதி – சத்தியம் செய்யவும் துணியமாட்டேன்…” – நாமல்

wpengine