உள்நாட்டு செய்திகள்

மீன் பிடிக்க சென்ற நான்கு மீனவர்கள் உயிரிழப்பு…



தொடந்துவ மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற படகு ஒன்றில் இருந்த 05 மீனவர்கள் விபத்துக்குள்ளாகியதாக படகு கண்காணிப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் நான்கு மீனவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், உயிரிழந்த இரண்டு மீனவர்களின் சடலங்கள் பலப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு மீனவரின் சடலம் அம்பலாங்கொட பட்டபெதிமுல்ல கடல் பகுதியில் கரையொதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் மேலுமொரு மீனவரின் சடலம் அதுரல கடலோரத்தில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

காலி துறைமுகத்தில் ஒருவர் பலி

wpengine

பால்மா – சீனி விலைகள் குறைப்பு..!

wpengine

பயத்தில் அல்ல,சிகிச்சைக்காகவே அமெரிக்கா சென்றேன் – கோத்தபாய

wpengine