உள்நாட்டு செய்திகள்

மீனவர் விவகாரம் – 3 மாதங்களுக்கு ஒரு தடவை கூடி ஆராயத் தீர்மானம்.


இலங்கை – இந்திய மீனவர்கள் விவகாரம் தொடர்பில் 3 மாதங்களுக்கு ஒரு தடவை, இருதரப்பும் கூடி கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் புதுடில்லியில் இன்று(05) நடைபெற்ற இருநாட்டு இராஜதந்திர மட்டத்திலான பேச்சிவார்த்தையிலேயே மேற்கண்ட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பில், இருநாட்டு வெளிவிவகார அமைச்சுகளும் அனுப்பி வைத்துள்ள கூட்டு ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

மீனவர் விவகாரம் தொடர்பில், பொறிமுறையொன்றை ஏற்படுத்தி அதனூடாக நிரந்தரத் தீர்வொன்று காண்பதற்கு, இந்தப் பேச்சுவார்த்தையின் போது, இருநாடுகளையும் சேர்ந்த மீனவக் குழுக்கள், ஒவ்வொரு  3 மாதங்களும் கூடி ஆராய்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை, இருநாடுகளைச் சேர்ந்த மீன்பிடித்துறை அமைச்சுகளுக்கும் இடையில், இந்த விவகாரம்  தொடர்பில் 6 மாதங்களுக்கு ஒரு தடவை கூட்டம் நடத்துவதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், அமைச்சுகள் மட்டத்திலான முதலாவது கூட்டம், எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி கொழும்பில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிள்ளையான் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

wpengine

உயிர், சொத்து சேதங்களுக்கு இழப்பீடு வழங்க பிரதமர் நடவடிக்கை…

wpengine

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியீடு.

wpengine