உள்நாட்டு செய்திகள்

மீதொட்டுமுல்ல குப்பை மேடு அமைந்துள்ள பகுதியில் மீளவும் சரிவு ஏற்பட வாய்ப்பு என எச்சரிக்கை..



எதிர்வரும் நாட்களில் மழை பெய்தால் மீளவும் மீதொட்டுமுல்ல குப்பை மேடு அமைந்துள்ள பகுதியில் மீளவும் சரிவு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கட்டிட ஆய்வு மையத்தின் நிலச்சரிவு மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு பணிப்பாளர் ஆர்.எம்.எஸ் பண்டார தெரிவித்துள்ளார்.

மீதொட்டுமுல்ல பிரதேசத்தில் மண்சரிவு ஏற்படவில்லை எனவும், இது ஓர் புதுவிதமான அனர்த்தம் எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் அதிகளவான குப்பைகள் சேகரிக்கப்பட்டதனால் அந்தப் பகுதியின் நிலம் தாழிறங்கியதுடன் வீடுகள் முன்நோக்கியும் மேல் நோக்கியும் தள்ளப்பட்டதாகவும் அவர் தெரவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் கடுமையான மழை பெய்தால் மீளவும் அந்தப் பகுதியில் அனர்த்தம் ஏற்படக்கூடிய அபாயம் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்வடைந்துள்ளதுடன், 28 பேரைக் காணவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த 167 பெயர்கள் நம்பிக்கையின் சாட்சிகள் பட்டியலில் இணைப்பு

Azeem Kilabdeen

கோட்டாபயவின் குடியுரிமை;  மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

wpengine

ஆஸி.வீரர் பிராட் ஹாடின் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு

wpengine