உள்நாட்டு செய்திகள்

மீதொட்டமுல்ல குப்பை மேடு குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு…



கொலன்னாவ – மீதொட்டமுல்ல பிரதேச குப்பை மேடு சரிந்தமையினால், ஏற்பட்ட சேதங்கள் பற்றி விசாரணை நடத்திய ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவின் அறிக்கை முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சந்ரதாஸ நாணயக்காரவினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மீதொட்டமுல்ல குப்பை மேட்டை அகற்றுவதற்காக 2015 – 2016ஆம் ஆண்டு காலப் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு கூடுதலான நிதி வழங்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபை இதற்கென 64 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு குறித்த இந்தத் தொகை 182 வரை அதிகரித்ததோடு, 2016ஆம் ஆண்டில் 232 மில்லியன் ரூபா வரை அதிகரித்திருப்பதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு மாநகர சபை கழிவகற்றுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்பதும், தீர்வு வழங்குவதற்காக யோசனைகளை முறையாக நடைமுறைப்படுத்தாமையுமே விபத்துக்கான காரணம் என்று அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

#rishma

Related posts

புகையிரத விபத்து தொடர்பில் நால்வர் பதவி நீக்கம்…

wpengine

இழப்பீட்டு அலுவலக மற்றும் இழப்பீடுகளை வழங்குவதற்கான சட்டமூல வர்த்தமானி வெளியீடு…

wpengine

தேயிலை ஏற்றுமதியில் நஷ்டம்..!

wpengine