உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மீதொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் முக்கிய கலந்துரையாடல்..



மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்த அனர்த்தம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் முக்கிய கூட்டம் ஒன்று இன்று(19) நடைபெறவுள்ளது.

இன்று முற்பகல் நடைபெறும் குறித்த இந்த கூட்டத்தில், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பல அரசாங்க அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது குறித்த அனர்த்தத்தின் பாதிப்புகள் குறித்த கணிப்பீடு முன்வைக்கப்படுவதுடன், மக்களுக்கான நிவாரணம் தொடர்பிலும்
பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடமைப்பு வேலைத்திட்டம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளதுள்ளதோடு, இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களை தேடும் பணிகள் இன்றும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

வாயு கசிவு காரணமாக மேலும் 50 ஊழியர்கள் மருத்துவமனையில்…

wpengine

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் காயம் – கலவரமாகும் அமெரிக்கா (VIDEO)

wpengine