கேளிக்கை

மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன்…



வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் சிம்ரன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்நிலையில் மாதவனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் சிம்ரன்.

ஏற்கெனவே பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களில் மாதவனும், சிம்ரனும் இணைந்து நடித்திருந்தார்கள்.

‘ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்ஸ்’ என்ற பெயரில் நம்பி நாராயாணன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. மாதவன் இந்த படத்தில் நம்பி நாராயணனாக நடிப்பதோடு, ஆனந்த் மகாதேவனுடன் இணைந்து இந்த படத்தை இயக்குகிறார்.

தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எடுக்கப்படும் இந்த படத்தில்தான் மாதவனுடன் சிம்ரன் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க மும்பையிலேயே நடக்க இருக்கிறது.

Image result for madhavan

Related posts

வாழு வாழ விடு… தனுஷின் சகோதரியின் உருக்கமான வேண்டுகோள்…

wpengine

காதலிக்க ஊக்குவிக்கும் அரசின் அதிரடி முடிவு…

wpengine

திருமணம் குறித்து நயன்தாராவின் திடீர் முடிவு

wpengine