உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மீண்டும் பகிரங்க விவாதத்திற்கு சம்பிக்கவிடமிருந்து மஹிந்தவுக்கு அழைப்பு



மீள்கட்டுமான அபிவிருத்தி முகவர் நிறுவனத்தின் (ராடா) ஊடாக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு பணம் கொடுக்கப்பட்டதா இல்லையா என்பது தொடர்பில் தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு, நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான  பாட்டலி சம்பிக்க ரணவக்க மீண்டும் சவால் விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி, புலி அமைப்புக்கு நிதி வழங்கிய முறைமை தொடர்பில் ராடா நிறுவனத்தின் உள்ளக அறிக்கை மற்றும் திறைசேரியூடாக ராடா நிறுவனத்துக்கு நிதி வழங்குவதற்கு முன்னாள் நிதியமைச்சரான மஹிந்த ராஜபக்ஷ கையொப்பமிட்ட அறிக்கையையும் அவர் காண்பித்தார்.

பத்தரமுல்லையில் உள்ள கட்சி காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த கணக்கு வழக்குகள் ராடா நிறுவனத்தின் தலைமையதிகாரியாக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் ஊடாகவே பேணப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

(riz)

 

Related posts

கிழக்கு மாகாண நிர்வாகம் தமது செயற்பாடுகளை நியாயமாகச் செய்யாவிடின் வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவர்..!

wpengine

பிணை முறி மோசடி – பிரதமருக்கும் அழைப்பு…

wpengine

இன்று பிரதமர் தலைமையில் விசேட ஒன்றுகூடல்..

wpengine