விளையாட்டு

மீண்டும் களத்தில் இஷாந்த் ஷர்மா



தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இஷாந்த் சர்மா இடம்பெறுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது போட்டி நாளை நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்திய அணியில் பஞ்சாப்பின் ஆல் ரவுண்டரான குர்கீரத் சிங் மான் இடம்பெற்றுள்ளார், ஏற்கனவே ஒருநாள் போட்டியில் இடம்பெற்றும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

அத்துடன் தடை நீங்கியுள்ள வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவும் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒருவேளை இஷாந்த் வந்தால், உமேஷ் யாதவ் அணியிலிருந்து நீக்கப்படலாம் என தெரிகிறது.

இதற்கிடையே கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிளாண்டர் காயத்தால் விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

 

Related posts

மும்பை அணியினை வீழ்த்தி கொல்கத்தா அணிக்கு வெற்றி..

wpengine

ராபாடாவுக்கான போட்டித்தடை நீக்கம்..

wpengine

தேநீர் இடைவேளை – மேத்யூஸ் இன்னிங்சினை வலுப்படுத்துகிறார்.. (Update)

wpengine