கேளிக்கை

மீண்டும் கமலோடு இணைந்து வாழ முடிவா? – கௌதமி விளக்கம்



மீண்டும் கமலோடு இணைந்து வாழ முடிவெடுத்திருப்பதாக வெளியான செய்திக்கு கவுதமி விளக்கமளித்துள்ளார்.

கமலுடன் இணைந்து வாழ்ந்து வந்த கவுதமி, சமீபத்தில் அவரிடமிருந்து பிரிந்து வாழத் தொடங்கியுள்ளார். மேலும், கமலைப் பிரிந்தது ஏன் என்று தன்னுடைய வலைப்பூவிலும் எழுதியிருந்தார்.

இந்நிலையில், மீண்டும் கமலோடு கவுதமி இணைந்து வாழ முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகின. அச்செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கவுதமி கூறியிருப்பதாவது:

முட்டாள்கள் அர்த்தமற்று பேசுவார்கள், நாய்கள் குலைக்கும். நான் மீண்டு வந்துவிட்டேன். எல்லோரும் அவரவர் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ளதான் வேண்டும். எது முக்கியமோ அதை செய்ய வேண்டும்

இவ்வாறு கவுதமி தெரிவித்துள்ளார்

Related posts

‘கபடதாரி’ படத்தில் பூஜா குமார்

wpengine

தள்ளிப்போகிறதா தர்பார்?

wpengine

யுனிசெப் அமைப்பின் நட்சத்திர அட்வகேட்டாக த்ரிஷா…

wpengine