உள்நாட்டு செய்திகள்

மீண்டும் ஒரு மண்சரிவு: மலையக மக்களை இயற்கையும் வஞ்சிக்கிறது



கொஸ்லந்தை மீரியபெத்த தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னமும் சரிசெய்யப்படாத நிலையில், மீண்டும் ஒரு மண்சரிவு அனர்த்தம் மஸ்கெலியா – லக்ஸபான ஹெமில்டன் தோட்ட மக்களை இடம்பெயர வைத்துள்ளது.

இயற்கை எழிலிற்குக் குறைவில்லாத, இயற்கை அனர்த்தத்திற்கும் முடிவேயில்லாத இலங்கைத் தீவின் ஒரு பிரதேசமாக தொடர்ந்தும் திகழ்ந்துகொண்டிருக்கின்றது மலையகம்.

மஸ்கெலியா – லக்ஸபான தோட்டத்தின் ஹெமில்டன் பிரிவில் மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் 35 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

நேற்று பெய்த கன மழை காரணமாக ஹெமில்டன் தோட்டத்தின் தொழிலாளர் குடியிருப்பின் பின்புறமாக உள்ள மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

அனர்த்தத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படாத நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள ஏழு குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன.

Related posts

துப்பாக்கி தன்னிச்சையாக இயங்கியதில் பெண் ஒருவர் காயம்

wpengine

வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் வெடிபொருட்களுடன் மூவர் கைது..

wpengine

கிழக்குக்கான புகையிரத இணைப்பை அதிகரித்தல், சேவையை நவீனப்படுத்தல் குறித்து கலந்துரையாடல்..!

wpengine