Top Story 2உள்நாட்டு செய்திகள்

மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிதியமைச்சினால் எரிபொருளுக்கு வரிச்சலுகை வழங்கப்படாவிட்டால் மீண்டும் எரிபொருள் விலையினை அதிகரிக்க வேண்டிய தேவையேற்படும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஹங்வெல்ல பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அந்நிய செலாவணி பிரச்சினையினால் நாடு பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.

குறிப்பாக எரிபொருள் கொள்வனவின் போது, அரசாங்கத்தினால் வரிச்சலுகை வழங்கப்பட வேண்டும்.

அதிக விலைக்கு கொள்வனவு செய்து, குறைந்த விலையிலேயே நாட்டில் எரிபொருளை விநியோகித்து வருகின்றோம்.

இதனால், மீண்டும் எரிபொருள் கொள்வனவுக்கான நிதி கையிருப்பில் இல்லாது போகும்.

எனவே, அரசாங்கம் வரிச்சலுகை வழங்காவிட்டால் எதிர்காலத்தில் ஒரு லீற்றர் டீசல் 52 ரூபாவாலும், ஒரு லீற்றர் பெற்றோல் 19 ரூபாவாலும் அதிகரிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Related posts

சுதந்திர தின நிகழ்வின் ஒத்திகை ஜனாதிபதியின் உத்தரவின் கீழ் இரத்து….

wpengine

இலங்கை குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது என்னாச்சு..?

wpengine

கடற்படை முகாம்கள் அகற்றப்படும் – பிரதமர்..

wpengine