ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மிஷ்கின் இயக்கத்தில் விஷால்?



விஷால் தற்போது ‘குட்டிப்புலி’ முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் ‘மருது’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்படிப்புகள் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இப்படத்தை தொடர்ந்து ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என கூறப்பட்டது.

ஆனால், விஷாலே இந்த படத்தை கைவிட்டுவிட்டதாக தெரிவித்திருந்தார். எனவே, அடுத்ததாக மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் விஷால் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

விஷாலுக்காக மிஷ்கின் எழுதிய கதையை தற்போது விஷால் படித்து வருவதாகவும், கூடிய விரைவில் இது உறுதியாகும் எனவும் கூறப்படுகிறது. அப்படி உறுதியானால் இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.

மிஷ்கின் தற்போது ராம், பூர்ணா நடிக்கும் ‘சவரக்கத்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிப்பதோடு மட்டுமில்லாமல், படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

IPL போட்டி – தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தடை…

wpengine

ஆசியக் கிண்ண தொடருக்கு தெரிவாகியுள்ள லசித் மாலிங்க குறித்து ஓர் கண்ணோட்டம்…

wpengine

ஜனாதிபதி கோட்டாபயவுடன் சஜித்? ரணில் ஓய்வு பெறுவார்…

wpengine