உள்நாட்டு செய்திகள்

மியன்மார் – றோகிஞ்சா அகதிகள் விவகாரம் – பொலிஸ் அதிகாரி சரண்..



மியன்மார் – றோகிஞ்சா அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த, கல்கிஸையில் உள்ள வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில், ​தேடப்பட்டுவந்த முன்னாள் பொலிஸ் காவலர், கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் சரணடடைந்துள்ளார்.

கடமையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ள, பொலிஸ் காவலர், ஷானக குணதிலக என்பவரே இவ்வாறு சரணடைந்துள்ளார். இவர், வாதுவையைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சரணடைந்த சந்தேக நபரை, கல்கிஸை நீதிமன்ற நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு, நடவடிக்கை எடுத்துள்ளதாக அப்பிரிவு மேலும் அறிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

வரவு செலவுத் திட்டம் பெப்ரவரி 17ம் திகதி சமர்ப்பிப்பு

Azeem Kilabdeen

சமிஞ்ஞை கட்டமைப்பை துரிதகதியில் அமுல்படுத்தத் தீர்மானம்…

wpengine

வெள்ளி விடுமுறை தொடர்பில் வெளியானது விசேட வர்த்தமானி!

wpengine