உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மின் பாவனையாளர்களிடம் மீளவும் கோரிக்கை..

(FASTNEWS | COLOMBO)- மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு அனைத்து பாவனையாளர்களிடமும் மீளவும் கோரியுள்ளது.

அதன் அபிவிருத்தி அத்தியட்சகர் சுலக்ஷன ஜயவர்த்தன இது தொடர்பில் தெரிவிக்கையில்; நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 2 ஆவது ஜெனரேட்டரில் ஏற்பட்ட கோளாறு தற்போது திருத்தப்பட்டுள்ளதாகவும், எனினும் உயர் அழுத்தத்தில் மின்சாரத்தினை விநியோகிக்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், தேவைக்கு அப்பாற் மின் உபகரண பாவனைகளை நிறுத்திக் கொள்ளுமாறும், மின்சாரத்தினை வீண் விரயம் செய்யாதிருக்குமாரும் கோரப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் மின்சார நிலையங்களில் அருகில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாகவும் குறித்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

அலுக்கோசு பதவிக்கு செயன்முறை பயிற்சிகளை வழங்க தீர்மானம்

wpengine

வடக்கில் காணிப் பதிவு விவகாரத்தில் அதிகாரிகள் மட்டத்தில் பாரிய மோசடி: செல்வம் எம்.பி. பகிரங்க எச்சரிக்கை

News Editor

பிள்ளையான் உட்பட நால்வரின் விளக்கமறில் தொடர்ந்தும் நீடிப்பு..

wpengine