உள்நாட்டு செய்திகள்

மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது…



தமது கோரிக்கைகளுக்கு சிறந்த தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும்(09) தொடர்கின்றது.

தமது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாத்திரம் வேலை செய்யும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை நேற்று(08) முதல் ஆரம்பித்துள்ளனர்.

எவ்வாறாயினும் அத்தியாவசிய சேவைகள் இடையூறின்றி முன்னெடுக்கப்படுவதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மின்சார சபையின் நீண்ட கால மின் பிறப்பாக்க திட்டம் தொடர்பாக இன்று அமைச்சரவையில் கலந்துரையாடவுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவள அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

Related posts

தம்மிக்கவிடம் இருந்த பொறுப்புக்களை கையகப்படுத்தினார் ரணில்!

News Editor

முச்சக்கரவண்டி சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் போது விசேட விழிப்புணர்வு செயலமர்வு..

wpengine

ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி

wpengine