உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மின்சார ஊழியர்களின் வேலை நிறுத்தம் 7ம் நாளாகவும் தொடர்கிறது..



அரசாங்கம் தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வை வழங்காத நிலையில், தொடர்ந்தும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவிருப்பதாக, மின்சார சபைப் பணியாளர்கள் ஒன்றியம் அறிவித்துள்ளது.

இதன்படி அவர்களின் போராட்டம் 7ம் நாளாகவும் இன்று(19) தொடர்கிறது.

இது தொடர்பில் நேற்று(18) தொழிற்துறை அமைச்சர் டபிள்யு.டி.ஜே.செனேவிரத்னவுடன், தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்திய போதும், அது தோல்வியில் முடிவடைந்துள்ளது.

குறித்த இந்த போராட்டத்தின் காரணமாக, ஹப்புத்தளை, புத்தளம், அம்பாறை உள்ளிட்ட சில பகுதிகளில் மின்விநியோக தடை ஏற்பட்டுள்ளது.

ஆனால் அவற்றில் பெரும்பாலானவை திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டவை என, மின்சாரத்துறை அமைச்சு மேலும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

வாகன விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

wpengine

சீரற்ற காலநிலை – 24 ஆம் திகதி வரை நீடிக்கும்

wpengine

க.பொ.த உயர் தர மற்றும் புலமை பரிசில் பரீட்சைகள் இம்முறை ஓகஸ்ட் மாதம்…

wpengine