உள்நாட்டு செய்திகள்

மிகின் லங்கா மற்றும் ஶ்ரீலங்கா எயார்லைனஸ் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு..



மிகின் லங்கா மற்றும் ஶ்ரீலங்கா எயார்லைனஸ் நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி குறித்து விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர் இந்தக் குழு நியமிக்கப்படும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இம்மாதம் 31ம் திகதி கிடைக்கப் பெறும் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று(22) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

Related posts

இலங்கைக்கு தொடர்ந்தும் அத்தியாவசியப் பொருட்கள்! தமிழக முதல்வரின் அறிவிப்பு!

wpengine

இன்று(19) நள்ளிரவு முதல் ரயில்வே தொழிற்சங்க ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

wpengine

ஹோமாகம தேர்தல் தொகுதி புதிய அமைப்பாளர் நியமனம்.

wpengine