கேளிக்கை

மாஸ்டர் படத்தை முதன்முதலாக திரையிட திட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவில் சினிமா திரையரங்குகள் திறந்ததும், விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தை முதன்முதலாக திரையிட திரையரங்குகள் அதிபர்கள் முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக சினிமா திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதனால் திரையரங்கு அதிபர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

திரையரங்குகளில் வேலை செய்யும் ஊழியர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இன்னும் 2 வாரங்களில் ஊரடங்கு நிபந்தனைகள் முழுமையாக தளர்த்தப்படும் என்றும், சினிமா திரையரங்குகளை திறக்க அனுமதி கிடைத்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படத்தை முதன்முதலாக திரையிட்டால் மட்டுமே ரசிகர்களும், பொதுமக்களும் பயம் இல்லாமல் படம் பார்க்க வருவார்கள் என்று திரையரங்குகள் அதிபர்கள் நம்புகிறார்கள். அதன்படி, விஜய் நடித்து திரைக்கு வர தயாராக இருக்கும் ‘மாஸ்டர்’ படத்தை முதன்முதலாக திரையிடுவது என்று திரையரங்குகள் அதிபர்கள் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

Related posts

பூஜா உமாசங்கர் மீளவும் காதல் வலையில்..

wpengine

வாரிசுக்கு “Blush” எனப் பெயரிட்டுக் கொஞ்சும் Gayle (Photos)

wpengine

அனுபம் கெர் குடும்பத்திலும் கொரோனா

wpengine