நேற்று மாலை(17) மாவனல்லை தபால் நிலையத்துக்கு முன் உள்ள மெத்தை விற்பனை நிலையமொன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்த கடையில் உள்ள அனைத்து பொருட்களும் தீயில் கருகி சேதமாகி உள்ளதாக அங்குள்ள நமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு படையினரின் உதவியுடன் இந்த தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.
இத்தீ விபத்து தொடர்பான காரணம் இன்னும் அறியப்படவில்லை. இந்த தீ விபத்து தொடர்பாக பல்வேறு கோணங்களில் மாவனல்லை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2 comments
இதன் பின்னடி இனவாதம் இருக்குமோ
மைத்திரி ஆட்சியுமா??????????????????????????
Comments are closed.