உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

மாலிங்க மீளவும் டெஸ்ட் அணிக்கு – க்ரஹம் ஃபோர்ட் விசேட கோரிக்கை…



இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவின் சேவை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் அவசியம் என இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் க்ரஹம் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியில் மீண்டும் லசித் மாலிங்க  இணைய வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

உபாதை காரணமாக ஓய்வில் இருந்த லசித் மாலிங்க, அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான T-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் மீண்டும் விளையாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

T-20 கிரிக்கெட் போட்டிகளில் அவர் மீண்டும் இணைந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது எனவும் மலிங்கவின் வருகை வரையறுக்கப்பட்ட ஒவர் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணியை வலுவடையச் செய்யும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

லசித் மாலிங்க  டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என க்ரகம் ஃபோர்ட் குறிப்பிட்டுள்ளார்

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 514 பேர் சிக்கினர்

wpengine

இதுவரை 790 கடற்படையினர் குணமடைந்தனர்

wpengine

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல்ல கைது…

wpengine