விளையாட்டு

மாலிங்கவினை உலகக் கிண்ண பயணத்தில் இணைப்பது குறித்து ஹதுருசிங்க வெளிப்படைக் கருத்து…


இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க இலங்கை அணி சார்பில் உலகக் கிண்ண அணியில் இடம்பிடித்துள்ள நிலையில், அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் திறமைகளை வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க தெரிவித்துள்ளார்.

“மாலிங்க எமது திட்டங்களில் உள்ளார். அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும். நாம் யாரையும் நீக்குவதாக இல்லை. அணி தான் எமது முதல் இலக்கு. அணியின் கலாச்சாரமானது காக்கப்பட வேண்டும்.

நாம் அவரை ஒதுக்கவில்லை. அவர் மிகவும் சிறந்த வீரர். அவர் கடந்த காலத்தில் எவ்வாறு விளையாடினாரோ அவ்வாறே இப்போதும் அவரால் முடியும் என நிரூபிக்க வேண்டும்.. பந்து வீசுவதில் மட்டுமின்றி பந்து காப்பதிலும் அவர் திறமையினை வெளிப்படுத்த வேண்டும். அவருக்கு சிறந்த வாய்ப்புகள் உள்ளன உள்நாட்டு இருபதுக்கு – 20 போட்டிகளில் பங்கேற்பதற்கு… அவர் திறமையினை வெளிப்படுத்தினால் எமது திட்டத்தினுள் அவர் கட்டாயம் உள்நுழைவார்”

Related posts

ஜடேஜா, புஜாரா உள்ளிட்ட சில வீரர்களுக்கு ஊக்க மருந்து தடுப்பு முகமை அழைப்பு

wpengine

இங்கிலாந்திடம் போராடித் தோற்று தொடரினைக் கைப்பற்றிய இந்தியா அணி.. [PHOTOS]

wpengine

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு..

wpengine