உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மாலபே தனியார் வைத்திய கல்லூரியின் உரிமைகள் உச்சநீதி மன்றத்தினால் உறுதி



மாலபே தனியார் வைத்திய கல்லூரியின் உரிமைகள் உச்சநீதி மன்றத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்திய கல்லூரியின் பெற்றோர் அமைப்பின் தலைவரான கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த தனியார் கல்லூரியை மூடுவதற்கோ அல்லது அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கோ யாருக்கும் உரிமை இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்காக அரசாங்கத்தினால் பாதுகாப்பு சபை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந்தக் கல்லூரிக்கு எதிராக கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் என்பன அரசியல் தூண்டுதலால் முன்னெடுக்கப்பட்டவை என்றும் கெமுனு விஜேரத்ன இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

மின் கட்டண திருத்தம் – வாய்மொழி கருத்து கோரல் ஆரம்பம்

Azeem Kilabdeen

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் காங்கிரஸ் தனித்தும், இணைந்தும் போட்டியிட்டு 159 ஆசனங்களை தனதாக்கிக்கொண்டுள்ளது…. பல சபைகளின் ஆட்சியும் அமைச்சர் ரிஷாட்டின் கட்சியின் வசமாகின்றது..

wpengine

கடுகதி புகையிரதம் ஒன்றுடன் கார் மோதியதில் நால்வர் உயிரிழப்பு…

wpengine