உலக செய்திகள்

மார்ச் மாதம் 13 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல்…



நேபாளம் நாட்டின் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 13 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள நாட்டின் ஜனாதிபதியாக பிந்தியா தேவி பந்தாரி கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பதவி ஏற்றார். அவரது பதவிக் காலம் முடிவடையாத நிலையில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 13 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் மாதம் 7 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தற்போது நேபாளத்தின் ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் பிந்தியா தேவி பந்தாரி நேபாளத்தின் முதல் பெண் ஜனாதிபதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

####

Related posts

ஊரடங்கு ஜனவரி 10ம் திகதி வரை அமுலில்

wpengine

வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயர் நீக்கம்

wpengine

கொலம்பியாவில் பாலம் இடிந்து விழுந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு…

wpengine