கேளிக்கை

மார்ச்சில் ரஷ்ய தொழிலதிபரை மணமுடிக்கவுள்ள பிரபல நடிகை…



தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ரேயா, ரஷ்ய தொழிலதிபருடன் மார்ச் மாதம் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகை ஸ்ரேயா. தற்போது தமிழில் கார்த்திக் நரேன் இயக்கும் `நரகாசூரன்’, படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன் இவருக்கும், இவரது ரஷ்ய காதலருக்கும் மார்ச் மாதம் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளிவந்தது. ஆனால், அது வதந்தி என கூறியிருந்தார்கள். ஆனால், தற்போது ஸ்ரேயாவுக்கு திருமணம் நடக்க இருப்பது உறுதி எனக் கூறப்படுகிறது.

ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரரும், தொழிலதிபருமான ஆண்ட்ரே கோஷிக்கும் ஸ்ரேயாவிற்கும் மார்ச் மாதம் நடக்கவுள்ளது. திருமண நிகழ்வு இந்து முறைப்படி மார்ச் 17, 18 மற்றும் 19 என மூன்று தினங்கள் உதய்பூரில் கோலாகலமாக நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

இராஜ் இனது “சூடான இரவு”க்கு தீனி போட்ட Shermaine இவர் தான்.. (PHOTOS)

wpengine

38 வயதில் மனதிற்கு பிடித்த ஒருவரை மணமுடிக்கவுள்ள கௌசல்யா…

wpengine

அசுரன் உட்பட தமிழ் சினிமாவுக்கு 7 தேசிய விருதுகள்

wpengine