உலக செய்திகள்

மாயமான மலேஷிய விமானம் MH-370 விவகாரம் – வழக்கை தள்ளுபடி செய்தது அமெரிக்கா..


மாயமான மலேஷிய விமானம் MH-370 தொடர்பாக போயிங், மலேஷியா ஏர்லைன்ஸ் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மலேஷியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானமான MH-370, மலேஷியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி சீனாவின் பீஜிங் நகருக்கு புறப்பட்டது. அதில் 227 பயணிகள், 12 ஊழியர்கள் பயணித்தனர். ஆனால், புறப்பட்ட சிறிது நேரத்தில் அது ரேடாரில் இருந்து மறைந்து மாயமானது.

அதில், நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

குறித்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜேக்சன், வழக்கை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தார்.

மலேஷிய விமான நிலையத்தில் இருந்து மலேஷியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தால் இயக்கப்பட்ட விமானம் மாயமானது தொடர்பான வழக்கு என்பதால் அமெரிக்காவில் விசாரிப்பது பொருத்தமற்றது என நீதிபதி தெரிவித்தார்.

Related posts

டிசம்பர் 31 உடன் “Whatsapp” செயலிழக்கும் ஸ்மார்ட் கைப்பேசிகளது பட்டியல்..

wpengine

ட்ரம்ப் வெற்றிக்கு உதவ புதின் உத்தரவு பிறப்பித்தார் – அமெரிக்க புலனாய்வு துறை ரகசிய அறிக்கை

wpengine

பாலியல் குற்றச்சாட்டில் அமைச்சர்கள் பதவி நீக்கம்

wpengine