Top Story 2உள்நாட்டு செய்திகள்

மாத்தளை மாநகர சபை மேயர் பதவி நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | மாத்தளை ) – மாத்தளை மாநகர சபையின் மேயர் டல்ஜித் அலுவிஹாரே மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து மத்திய மாகாண ஆளுநனரால் வௌியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார்.

டில்ஜித் அலுவிஹாரேவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை ஓய்வு பெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தனவால் கடந்த 24 ஆம் திகதி மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு கமவேவிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவும் அபாயம்

wpengine

சம்பாயோ உள்ளிட்ட நால்வருக்கு பிணை

wpengine

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் குற்றச்சாட்டுக்கள் திட்டமிட்டு சுமத்தப்பட்டவை – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திட்டவட்டம்

wpengine