உள்நாட்டு செய்திகள்

மாத்தறை – ஹம்பாந்தோட்டை வரையான அதிவேக வீதி ஆகஸ்ட் மாதத்திற்குள் மக்கள் பாவனைக்கு…



இலங்கையின் அதிவேக வீதிக்கட்டமைப்பில் இந்த வருட இறுதிக்குள் மேலும் 145 கிலோமீட்டர் அதிகரிக்கப்படவுள்ளது.

தெற்கு அதிவேக வீதியின் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான 96 கிலோமீட்டர் பகுதி இந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதத்திற்குள் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய அதிவேக வீதியின் இரண்டாம் கட்டமான மீரிகமவிலிருந்து குருநாகல் வரையுள்ள 40 கிலோமீட்டர் வீதியின் நிர்மாணப்பணிகள் இந்த வருடத்தின் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படவுள்ளன.

2016 ஆம் ஆண்டு நவம்பர் மாத ஆரம்பத்தில் முன்னெடுக்கப்பட்ட மத்திய அதிவேக வீதியின் இரண்டாம் கட்டம், இந்த வருட இறுதிக்குள் நிறைவு செய்யப்படவுள்ளது.

எனினும், முதற்கட்டம் நிறைவு செய்யப்படும் காலம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

Related posts

சஜித் பிரேமதாஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!

News Editor

தனிமைப்படுத்தலில் இருந்த பெண் உயிரிழப்பு

wpengine

UNHCR பாதுகாப்பின் கீழிருந்த றோஹிஞ்சா அகதிகள் சிலர் இலங்கையில் கைது..

wpengine