உள்நாட்டு செய்திகள்

மாத்தறை, கிரிந்த வன்முறை – 04 பொலிசார் பணி இடைநிறுத்தம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாத்தறை, கிரிந்த பகுதியில் கடந்த 26 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளை தடுக்க தவறிய குற்றச்சாட்டில் நான்கு பொலிசார் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 26ஆம் திகதி இரவு இடம்பெற்ற குறித்த வன்முறைகள் ஏற்படுவதை தடுக்க தவறியமை, கடமைகளை சரிவர செய்யாமை, சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் ஹக்மன பொலிஸ் நிலையத்தின் 4 பொலிசார் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறுபான்மை மக்களின் கருத்துக்களும் உள்வாங்கப்படவேண்டும் – அமைச்சர் ரிஷாத்

wpengine

விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனம் எதிர்வரும் மார்ச் மாத இறுதியில்…

wpengine

ஒதுக்கீடு குறைப்பு குறித்து மாகாண சபை முதலமைச்சர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்..

wpengine