உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மாத்தறை – காலி ரயில் சேவை நாளைய தினமும் பாதிப்பு



மாத்தறைக்கும் காலிக்கும் இடையிலான புகையிரத சேவை நாளைய தினமும் இடம்பெற மாட்டாது எனபுகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

கட்டுகொட பாலத்தின் புனர்நிர்மாணப் பணிகள்தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதன் காரணமாகவே புகையிரத சேவை இடம்பெறமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.

இருந்த போதிலும் காலி புகையிரத நிலையத்திலிருந்து புகையிரத சேவை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டுகொட பாலத்தின் புனர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதனால் நேற்று முன்தினம் தொடக்கம் புகையிரத சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தது.

அத்துடன் நாளை மறுதினம் முதல் புகையிரத சேவை தொடர்ந்தும் வழமைபோல் இடம்பெறும் என புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர் ஆகஸ்ட் விடுமுறைக்கு பின் வழங்கப்படும்…

wpengine

ஜனாதிபதி கதிர்காம தேவாலய மத வழிபாட்டில்.

wpengine

மழை காரணமாக கடும் வாகன நெரிசல்

wpengine