உள்நாட்டு செய்திகள்

மாத்தறை துப்பாக்கிச்சூடு – சந்தேகநபர்களைத் தேடும் நடவடிக்கை ஆரம்பம்…



மாத்தறை கம்புறுபிட்டியவில் நேற்றிரவு(25) பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கிச் சூட்டு மோதலில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்ற இரண்டு பாதாள உலக குழு உறுப்பினர்களையும் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

மாத்தறை கம்புறுபிட்டிய, அகுரஸ்ஸ வீதியில் வில்பிட்ட பகுதியில் நேற்றிரவு பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் குழுவொன்றுக்கிடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் தெற்கின் பாதாளக் குழுவின் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த துப்பாக்கிச்சூட்டின்போது, சந்தேகநபர்கள் சிலர் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

Related posts

பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நாளை

wpengine

இலங்கையில் புதிதாக அச்சிடப்படவுள்ள பணம்!

wpengine

அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பிற்கு தயார்

wpengine