உள்நாட்டு செய்திகள்

மாதம்பிட்டி இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஐவர் கைது



(FASTNEWS|COLOMBO)- கிரேன்பாஸ், மாதம்பிட்டி மயானத்திற்கு அருகில் நேற்று(15) பிற்பகல் கூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 5 பேர் வத்தளை பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் உயிரிழந்த நபர்களில், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ´ஆனமாலு ரங்க´ என்ற நபரும் அடங்குவதாக இனங்காணப்பட்டுள்ளது.

இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் முடிவாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்க கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Related posts

கூட்டு எதிர்க்கட்சி பா.உறுப்பினர்களின் சம்பளம் நிவாரணங்களுக்காக.. – அரசின் 10 இலட்சம் எங்கே..?

wpengine

இன்றைய இரவு நேர இசை நிகழ்ச்சியில் “ப்ரா” வீசத்திட்டம் – பாதுகாப்பு படையினர் உசார் நிலையில்

wpengine

ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம்

wpengine