உள்நாட்டு செய்திகள்

மாணவி வித்யா பாலியல் கொலை – DIG லலித் ஜயசிங்க பணியிலிருந்து இடைநிறுத்தம்..



பூங்குடுதீவு மாணவி வித்யாவின் பாலியல் படுகொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்ய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, லலித் ஜயசிங்கவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியில் கடமையாற்றுவதற்கான தடை உத்தரவு இன்று(21) முதல் அமுலுக்கு வருவதாகவும் ஆரியதாச குரே மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கொலை வழக்குடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் சுவிஸ் குமார் என்பவரை கொழும்புக்கு தப்பிச் செல்வதற்கு உதவி வழங்கியமைக்காக லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டிருந்தார்.

லலித் ஜயசிங்கவை பணியிலிருந்து இடைநிறுத்தக் கோரி பொலிஸ் மா அதிபர் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு விடுத்திருந்த வேண்டுகோளை ஆராய்ந்த பின்னர் குறித்த இந்த அனுமதியை நேற்று(20) வழங்கியுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.

 

 

(rizmira)

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு…

wpengine

லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் புதிய தலைவர் நியமனம்…

wpengine

இன்று ஜனாதிபதியை வெவ்வேறாக சந்திக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள்…

wpengine