உள்நாட்டு செய்திகள்

மாணவி வித்யாவின் பாலியல் கொலை வழக்கு மேல் நீதிமன்றில்..



புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு இன்று புதன்கிழமை (10) யாழ்.மேல் நீதிமன்றத்தில் காலநீடிப்புக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

புங்குடுதீவு மாணவி கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திக் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை கடந்த ஒரு வருடமாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்திலேயே நடைபெற்று வந்தது.

கடந்த மே மாதம் 11ஆம் திகதி காலநீடிப்புக்காக மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, 3 மாதங்களுக்கு காலநீடிப்புச் செய்து மா.இளஞ்செழியன் உத்தரவிட்டிருந்தார்.

அந்த காலநீடிப்பு நாளையுடன் முடிவுக்கு வருகின்றது.

இந்நிலையில் தொடர்ந்தும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடத்துவதற்கான அனுமதியை பெறுவதற்காக மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 

Related posts

நியூசிலாந்து வெற்றிவாகை சூடியது

wpengine

தனியார் உயர்கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்த விசேட சட்டம்…

wpengine

பாகிஸ்தானிற்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு

wpengine