உள்நாட்டு செய்திகள்

மாணவி வித்தியா பாலியல் படுகொலை வழக்கு – லலித் ஜயசிங்க மீண்டும் விளக்கமறியலில்..



யாழ் – புங்குடுதீவு மாணவி வித்யாவின் பாலியல் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் லலித் ஜயசிங்கவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற் துறை மேலதிக நீதவான் ஆர்.ஈ.சபேசன் இன்று(04) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாணவி வித்தியாவின் படுகொலை சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபர் சசிகுமார், யாழ்ப்பணத்தில் இருந்து வெளியேறுவதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கடந்த ஜூலை மாதம் 15 ஆம் திகதி முன்னாள் சிரேஷ்ட காவல்துறைமா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்மையும் குறிப்பித்தக்கது.

 

(rizmira)

Related posts

குறைமதிப்பிடப்பட்ட அதிசொகுசு வாகனங்கள் குறித்த விசாரணைகளை நிறுத்துமாறு கோரிக்கை.

wpengine

சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு

wpengine

வடமாகாண வைத்தியர்களும் நாளை(02) வேலைநிறுத்தப் போராட்டத்தில்…

wpengine