உள்நாட்டு செய்திகள்

மாணவி வித்தியா பாலியல் கொலை – பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு பிணை..



புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் பாலியல் கொலை வழக்கின் சந்தேக நபர் ஒருவரை தப்பிக்க உதவி செய்தார் எனற குற்றச்சாட்டின் பேரில் கைதாகிய விளக்கமறியலில் வைக்கப்பட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவை இன்று(13) பிணையில் செல்ல யாழ்.ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, 3 லட்சம் ரொக்க பிணையிலும், 5 லட்சம் ரூபா பெறுமதியான 4 சரீர பிணையிலும், பிணையில் செல்ல அவருக்கு ஊர்காவற்துறை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், அவரது கடவுச்சீட்டை முடக்கவும், வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட் கிழமைகளில் கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வு பிரிவுக்கு சென்று கையொப்பமிட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த இந்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

உபாதை காரணாமாக துஷ்மந்தவும் நாடு திரும்பினார்

wpengine

விரிவுரைகளில் வழமை போல் கலந்து கொள்ள மருத்துவ பீட மாணவர்கள் முடிவு….

wpengine

மீள் மதிப்பீட்டுக்காக எதிர்வரும் 20ம் திகதிக்கு முன் விண்ணப்பிக்க முடியும்…

wpengine