உள்நாட்டு செய்திகள்

மாணவியினை தாக்கியதாக கூறப்படும் பெண் அதிபருக்கு சிறைவாசம்



பாடசாலை மாணவி ஒருவரை மோசமாக தாக்கிய அதிபர் ஒருவருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

சர்வதேச பாடசாலை ஒன்றின் பெண் அதிபர் ஒருவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா பஹல பியன்வல பிரதேசத்தில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையொன்றின் அதிபரே இவ்வாறு நீதியின் முன் தண்டிக்கப்பட்டுள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த அதிபருக்கு இரண்டாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்டனை ஏழு ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக ஒரு லட்சம் ரூபா மாணவிக்கு நட்ட ஈடாக வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தக் குறித்த சர்வதேச பாடசாலையின் அதிபர் தற்போது ஓய்வு பெற்றுக்கொண்டுள்ளார்.

Related posts

இலங்கை இனப்பிரச்சினை தீர புதிய அரசியல் அமைப்பு தேவை – மங்கள

wpengine

மாத்தறை, பாடசாலை மாணவன் கொலை தொடர்பில் முக்கிய ஆதாரம் சிக்கியது…

wpengine

தொடர்ந்தும் நீடிப்பு மண்சரிவு அபாய எச்சரிக்கை..

wpengine