Top Story 2உள்நாட்டு செய்திகள்

மாணவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வரும் நிலையில், 18 மற்றும் 19 வயது பாடசாலை மாணவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது.

அதற்கிணங்க, மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் சுகாதார அமைச்சு இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

முதற்கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் இந்த வேலைத்திட்டமானது இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, ஹோமாகம, ஸ்ரீஜயவர்த்தனபுர, பிலியந்தல ஆகிய கல்வி வலயங்களில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இறுதி ஓவரில் இறுதி பந்திற்கு முகம்கொடுத்த தோனியால் இந்தியா உலகிற்கு முன் தலைகுனிந்தது..

wpengine

எரிபொருள் விலையை குறைக்குமாறு ஐ.தே.க கோரிக்கை

wpengine

அமைச்சரவையில் முறுகல் நிலை – பதவி விலக தயாராகும் இராஜாங்க அமைச்சர்கள்..!

wpengine