உள்நாட்டு செய்திகள்

மருத்துவமனை வளாகத்தில் அகழ்வு பணிகள் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | யாழ்ப்பாணம்) –  மனித எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக கூறப்படும் மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் இன்றைய தினம் அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்.

மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் புனர்வாழ்வு வைத்தியசாலைக்கான கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக காணி துப்புரவு பணிகள் இடம்பெற்று வந்தன.

இதன்போது, குறித்த பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் மாங்குளம் காவற்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.

அது தொடர்பில் பொலிசாரின் அறிவுறுத்தலுக்கிணங்க சம்பவ இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எஸ்.லெனின்குமார், மனித எச்சங்கள் மீட்கப்பட்ட குறித்த இடம் தொடர்பான வரலாறுகளை ஆராயுமாறு காவற்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related posts

மின்சார சபை – எரிபொருள் கூட்டுத்தாபனத்தில் 4000 ஊழியர்களுக்கு தட்டுப்பாடு..!

wpengine

தண்டவாளம் கீழிறங்கியுள்ளதால் மலையக ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

wpengine

பல்கலைக்கழக வாய்ப்பு கிடைத்த மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

Azeem Kilabdeen