ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மாகந்துரே மதூஷுடன் கைதான இராஜதந்திர கடவுச்சீட்டுக்கு உரித்தான நபர் யார்..?



துபாயில் ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழுவின் தலைவர்களில் ஒருவருமான மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட குழுவில் இராஜதந்திர கடவுச்சீட்டுள்ள ஒருவரும் அடங்குவதாக அந்நாட்டின் கலீஜ் டைம்ஸ் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்த நிலையில் குறித்த இராஜதந்திர கடவுச்சீட்டு தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்ற நிலையில் நாம அது குறித்து ஆராய்ந்தோம்.

அதன்படி, குறித்த இராஜதந்திர கடவுச்சீட்டுக்கு இந்நாட்டின் முன்னணி பதவிகளில் உள்ள 29 குழுக்களுக்கு வழங்கப்படும் என தெரிய வந்துள்ளது. அதில், ஜனாதிபதி, பிரதமர்,முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்கள் சபாநாயகர்கள், நீதியரசர்கள், அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு நெருன்கிய குடுபத்தினரும் உள்ளடங்குகின்றனர்.

வெளிநாட்டு பயணங்களில் பங்கு கொள்ளும் அமைச்சரவை குழுவின் தீர்மானங்களுடன் தொடர்புடைய அதிகாரிகள், மாகாண ஆளுநர்கள், பிரதான அமைச்சர்கள், பிரதி மற்றும் அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்கள், ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இராஜதந்திர கடவுச் சீட்டு விநியோகிக்கப்படும். மேலும் பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை தலைவர்கள், அமைச்சர்களைப் போன்றே அவர்களது மனைவியர் ஆகியோரும் குறித்த பட்டியலில் உள்ளடங்குகின்றனர்.

போதைப்பொருள் வியாபரம் தொடர்பில் அரசியல்வாதிகள் உள்ளதாகவும், அது குறித்து இந்நாட்டு மக்களும் நன்கு அறிந்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்திருந்தார்.

 

(iFA)

Related posts

“​பொறுத்தது போதும்” முதலாவது மக்கள் ஆர்ப்பாட்டம் மஹிந்த தலைமையில்…

wpengine

மஹிந்தவுக்கு சவாலாகிறாரா ஹரீன்..? அனல் பறக்கும் சவால்களும், மானங்கெட்ட அரசியலும்..

wpengine

IPL 2019 – அதிகபட்ச அடிப்படை ஏல விலை கொண்ட வீரர்களின் பட்டியலில் மலிங்க மற்றும் மேத்யூஸ்..

wpengine