உள்நாட்டு செய்திகள்

மஹிந்த தேசப்பிரிய இராஜினாமா..?



உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை அடுத்த வருடத்திற்குள் நடத்தாவிட்டால் தனது பதவியிலிருந்து விலகத் தீர்மானித்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிகள் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நேற்று முன்தினம்(20) நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இரண்டு வருட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வரும் குறித்த இந்தத் தேர்தலை அடுத்த வருட முடிவிற்குள் நடத்தி முடிக்காவிட்டால் தாம் இராஜினாமா செய்வதாக தேர்தல்கள் ஆணையாளர் இன்று(22) தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் நடத்தி முடிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

ஶ்ரீ.சு.க – ஶ்ரீ.பொ.மு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கைச்சாத்து

wpengine

அமைச்சர் சம்பிகவின் தந்தை காலமானார்

wpengine

பொதுத் தேர்தல் – ஊழியர்களது விடுமுறை குறித்து அறிவிப்பு

wpengine