உள்நாட்டு செய்திகள்

மஹிந்த கொழும்பு உயர்நீதிமன்றத்துக்கு வருகை



முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பு உயர்நீதிமன்றத்துக்கு வருகை தந்துள்ளார். அவருடைய புதல்வரான யோஷித ராஜபக்ஷவின் பிணை மனு விசாரணையை பார்வையிடுவதற்கே அவர், நீதிமன்றத்துக்கு இவ்வாறு வருகை தந்துள்ளார்.

அவருக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் கடுவலை மஜிஸ்திரேட் நீதிமன்றம் யோஷித்தவின் விளக்கமறியல் காலத்தை தொடர்ந்தும் நீடித்துள்ளது.

இந்நிலையில் யோஷித்த ராஜபக்ஷவுக்கு பிணை வழங்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் பிணைமனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் தனது பாதுகாவலர்கள் சகிதம் சற்று முன்னர் உயர்நீதிமன்றத்துக்கு வருகை தந்துள்ளார்.

Related posts

மன்னார் உயிலங்குளம் கமநல சேவைகள் நிலையம் திறந்துவைப்பு

wpengine

சரத் வீரசேகர ஒரு மனநோயாளி; அடித்து விரட்டுங்கள்..!

wpengine

திருகோணமலை மாவட்ட மாணவர்களுக்கு நியாயம் வழங்குவதில் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் தோல்வி கண்டுள்ளார். – இம்ரான் எம்.பி..!

wpengine