உள்நாட்டு செய்திகள்

மஹிந்த அரசின் செயற்பாடுகளே பாரியளவு அழிவுகளுக்கு காரணம்.. – டிலான்



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் தூர நோக்க செயற்பாடுகளே தென் மாகாணத்தில் பாரியளவு அழிவுகள் ஏற்படக் காரணம் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா குற்றஞ்சாட்டி உள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட போது அப்போதைய அரசாங்கம் இயற்கை பாதிப்புக்கள் மற்றும் சுற்றாடல் காரணிகள் குறித்து எந்தவித கவனமும் செலுத்தவில்லை என குற்றம் சுமத்தியுள்ள அவர் தாமும் அந்த அமைச்சில் அங்கம் வகித்த ஒருவரே எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அப்போதைய அரசாங்கம் சுற்றாடல் காரணிகளை கருத்திற் கொண்டு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணித்திருந்தால் இத்தனை அழிவுகள் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டிருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலைகள் மிகவும் அவசியமானது என்ற போதிலும் சுற்றாடல் காரணிகள் கருத்திற் கொள்ளப்படாது மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் வெறும் ஆபத்துக்களை உண்டாக்கும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

(rizmira)

Related posts

அமைச்சர் தம்மிக்க பெரேரா இராஜினாமா!

News Editor

GMOA இன்று தொழிற்சங்க நடவடிக்கையில்

wpengine

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய இணையத்தளம் அறிமுகம்

wpengine