உள்நாட்டு செய்திகள்

மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு ஜூலை மாதம் விசாரணைக்கு…



முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கினை எதிர்வரும் ஜூலை மாதம் 09ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் கிஹான் குலதுங்க இன்று(26) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மஹிந்தானந்த அளுத்கமகே அமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமாக பெறப்பட்ட 274 இலட்சம் ரூபா பணத்தைப் பயன்படுத்தி பொரள்ளை – கிங்சி வீதியில் வீடொன்றைக் கொள்வனவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு எச்சரிக்கை…

wpengine

50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று…

wpengine

பயங்கரவாதத்திற்கு மீண்டும் நிதியுதவி செய்தால் தமிழ் அமைப்புகளுக்கு தடை விதிக்கப்படும் – பாதுகாப்பு அமைச்சு

wpengine