உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவை ஸ்ரீ.சு.கட்சியின் ஆலோசகர் பதவியிலிருந்து நீக்குமாறு கோரிக்கை..



ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நீக்குமாறு அக்கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர இளம் தொழிலாளர்கள் அமைப்பின் நிறைவேற்றுக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அத்தொழிலாளர் அமைப்பின் உறுப்பினர் ரஜிக கொடிதுவக்கு இதனைத் தெரிவிதுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தைத்துக் கொண்டிருக்கிறார். எமது கட்சியின் அங்கத்தவராகவும் ஆலோசகராகவும் செயற்பட்டுக் கொண்டு ஜீ.எல்.பீரிஸ் ஆரம்பித்துள்ள பொதுஜன பெரமுன எனப்படும் புதிய கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்.

இவரது செயற்பாடுகள் கட்சியின் அபிவிருத்திக்கு பாதிப்பாகவும், மக்கள் மத்தியில் கட்சி தொடர்பில அதிருப்தி நிலைகளை தோற்றுவிக்கவும் காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 

#rishma

Related posts

மஹிந்தவின் சீன விஜயத்திற்கான சகல வசதிகளையும் வழங்குமாறு பிரதமர் பணிப்பு.

wpengine

பால்மா விலைக்கு புதிய சூத்திரம் – அமைச்சரவை அனுமதி..

wpengine

SLPP-ஆதரவு வழங்கும் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

wpengine